நீசபங்க ராஜயோகம்:சில உண்மைகள்! -ஜோதிட சாஸ்திரம்,மன்மோகன்சிங்,சதாம்உசேன்,மோடி,அப்துல்கலாம்,சதானந்த கவுடா,வாசிம் அகரம்,நடிகர்,விஜய்,அஜித்,ஜெய்,கமலஹாசன்,சித்தார்த்,விக்ரம்,ஜாதகம்,ஜோதிடம்,சோதிடம்!

மன்மோகன்சிங் ஜாதகம்,சதாம்உசேன் ஜாதகம் ,பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஜாதகம்,அப்துல்கலாம் ஜாகதம்,சதானந்த கவுடா ஜாகதம்,
வாசிம் அகரம் ஜாதகம், நடிகர் ஜாதகம் ,விஜய் ஜயாதகம்,அஜித் ஜாதகம்,ஜெய் ஜாதகம்,கமலஹாசன் ஜாதகம், சித்தார்த் ஜாதகம், விக்ரம்ஜாதகம், சோதிடம்!  ஜாதகம்

ஒரு இடத்தில் அடி வாங்கினாலும் மற்றொரு இடத்தில் புகழ் பெறுவதுதான் நீசபங்க ராஜயோகம்.

  உங்களுடைய ஜாதகத்திலே நன்மை தரத்தக்க கிரகங்கள் வலிமையாக இருந்தும், தீமை செய்யக் கூடிய பகை கிரகங்கள் வலுவற்றும் இருந்தால் நீங்கள் இந்த உலகில் எல்லாச் செல்வங்களையும் பெற்று மிகவும் அதிர்ஷ்டசாலியாக வாழ்வீர்கள் என்பது ஜோதிட விதிகளில் ஒன்றாகும்.  ஒரு கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலு இழந்துபோய் இருக்கின்றதா என்பதை  உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் என்பவற்றை பொருத்தது.  நாம் மதிப்பெண் தந்தால் நீசநிலைக்கு 0, பகைக்குப் 10மதிப்பெண்களும், சமநிலைக்கு 20ம், நட்புக்கு 40, ஆட்சிக்கு 60, மூலத்திரிகோணம் 80, உச்சம் 100 எனத் தோராயமாகக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் ஒரு கிரகம் தனது வலிமையனைத்தையும் இழந்து 0 மதிப்பெண் பெறும் நிலையை கிரகம் நீசம் எனலாம். இநத மாதிரி நீசநிலையில் இருக்கின்ற கிரகம் தன்னுடைய காரகத்துவப் பலன்களையும், ஆதிபத்தியப் பலன்களையும் தரமுடியாது. என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
ஒரு கிரகம் நீசம்மடைந்தால் அந்தக்கிரகம் சம்பந்தபட்ட எந்த ஒரு விஷயமும் முழுமையாக நமக்கு கிடைக்காது. அந்தக் கிரகத்தால் ஜாதகருக்கு எவ்விதமான பயனும் இருக்காது.  விதி என்ற ஒன்று இருப்பது போல விலக்கு என்ற ஒன்றும் இருக்கிறது. இதன்படி, ஒரு கிரகம் நீசபங்கம் பெறும் பொழுது இழந்த தன் வலுவைப் பெறுகிறது ஒரு கிரகம் சரியான நீசபங்கத்தைப் பெறுமானால் அது உச்சத்தை விட அதிகமான வலிமையை அடையும்.. இது மதிப்பெண் நிலையில் 100க்கு 100 என்பதையும் தாண்டி 120 என்கிற ஒரு வினோதமான நிலையைப் பெறும். நீசபங்கம் பெறும் கிரகம் ஆரம்பத்தில் நீசத்தைத் தந்து அதன் பிறகு மிகுந்த வளர்ச்சியைத் தரும். முதலில் ஒன்றுமில்லாத நிலையை உருவாக்கி பின்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். நீசக் கிரகம் எந்த ஆதி பத்தியத்திற்கு உரியதோ அதுவும் முதலில் ஒன்றுமில்லாமல் இருந்து அப்புறம்தான் மிகுந்த வளர்ச்சி பெறும்
சூரியன் நீசம் பெற்றால் அரசுவேலை இல்லை. அரசலாபம் கிடையாது. தலைமைப் பதவியைப் பற்றிக் கனவுகூட காண முடியாது!

கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும். புதன் மீனத்தில் நீச்சமாகிறது. மீனம் குரு பகவானின் வீடு. குரு கடகத்தில் உச்சமடைந்தால் அது நீசபங்க ராஜயோகம் எனக்கொள்ளப்படும். எந்த கிரகம் நீச்சமாகிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை அடைவதற்கு தடைகளும், அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், தோல்விகளையும் நீசம் கொடுக்கும். அதுவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கும் பின்னர் இழந்த எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வழங்கி விட்டு போய்விடும்.

சரியான நீசபங்கத்திற்கான விதிகள்

1) நீசனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம்மடைந்தால்
2) நீசக்கிரகம் பரிவர்த்தனை அடைந்தால்
3) நீசன் வர்க்கோத்தமம் அடைந்தால்
4) நீசக்கிரகத்துடன் ஒரு உச்சன் சேர்ந்திருந்தால்
5) நீசன் - லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருந்தால்
6) நீசனுக்கு வீடு கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில் இருந்தால்
7) நீசனின் ராசியதிபதி பரிவர்த்தனை ஆனால்
8) நீசனை இன்னொரு நீசன் பார்த்தால்
9) நீசன் வக்கிரம் அடைந்தால்
10) நீசன் அம்சத்தில் உச்சம் அடைந்தால்
11 ) நீசனை நிசன் நின்ற  வீட்டின் அதிபதியே பார்த்தால் அல்லது  அந்த நீசனுடன் சேர்நதால்
 12) நீசன் நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின சேர்க்கை பெற்றால்

நடிகர் விக்ரம் ஜாதகத்தில் லக்னத்துக்கு கேந்திரமான 10ல் புதன் நீசம் அடைநது நீச பங்கமும் பெறுகிறது்

நடிகர் ஜெய் ஜாதகத்திலும் 10ல் புதன் நீசம் உச்சம் பெற்ற சுக்ரனுடன் சேர்ந்து நீச பங்கமாகிறது.

நடிகர் அஜித் ஜாதகத்திலும் புதன் நீசம் உச்சம் பெற்ற சுக்ரனுடன் சேர்க்கை அடைந்து நீசபங்க ராஜயோகத்தை தந்தது!


சதானந்த கவுடா ஜாதகத்தை பாருங்கள் 10ல் புதன் நீசம் லக்னத்துக்கு கேந்திரத்தில் திக்பலம் பெற்ற காரணத்தினால் நீசபங்க ராஜயோகத்தை தந்தது.

நடிகர் சித்தார்த் ஜாதகத்தில் புதன் 9ல் நீசமடைய அந்த வீட்டின் அதிபதியே பார்வை செய்வதாலுமு், அந்த வீட்டின் அதிபதி உச்சம் பெற்றதாலும் நீசபங்கமாகி நீசபங்க ராஜயோகத்தை தருகிறது.

நடிகர் விஜய் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் அடைந்து ஆட்சிபெற்ற சந்திரனுடன் சேர்க்கை பெற்று நீசபங்க ராஜயோகத்தை தருகிறது.


நடிகர் கமலஹாசன் ஜாதகத்தில் 4ல் சூரியன் நீசமடைந்து பின்னர் உச்சம் பெற்ற சனியால் நீசபங்கமடைந்து நீசபங்க ராஜ யோகத்தை தருகிறது..

சிவகார்திகேயன் ஜாதகத்தில் குரு நீசம் அதை அந்த வீட்டின் அதிபதி சனியே பார்வை செய்ய நீச பங்கம் ஏற்பட்டு நீசபங்க ராஜயோகம் ஆகிறது.

புகழ் பெற்ற பிரபரமான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் ஜாதகத்தில் சந்திரன் நீசமாக அந்த வீட்டின் அதிபதியே பார்வை செய்ய நீச பங்க ராஜ யோகமாகியது


முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் ஜாதகத்தில் சந்திரன் நீசமாகிட அந்த சந்திரனை சந்திரன் வீட்டில் உச்சமாகி இருக்கும் குருவே பார்வை செய்து நீசபங்க ராஜயோகத்தை தருகிறார்.

பாரத பிரதமர் மோடி ஜாதகத்திலும் சந்திரன் நீசமாகிட  அந்த வீட்டின் அதிபதியே சேர்ந்து நீசபங்க ராஜயோகத்தை தருகிறது.

ஈராக் அதிபர் சதாம் உசேன் ஜாதகத்தில்
8 ல் குரு நீசம். 8க்குரியோனும் 10க்குரியோனும் பரிவர்த்தனை அதனால் நீச பங்க ராஜ யோகம்.
நீசமான குருவின் வீட்டு அதிபர் சனி உச்சம் பெற்ற சுக்ரனுடன் சேரந்ததும் நீச பங்கமே
நீசமான சந்திரன் ஆட்சிபெற்ற செவ்வாயுடன் சேர்ந்ததும் நீச பங்கமே

முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் ஜாதகத்தில் செவ்வாய் நிசமடைய அதனுடன் ஆட்சிபெற்ற சந்திரன் சேர்ந்திருந்து நிசபங்க ராஜயோகத்தை தருகிறது

ராஜராஜ சோழன்  தம்பியாக பிறந்ததனால் மன்னனாகும் வாய்ப்பு இவருக்கு கிடையாது. ஆனால் அண்ணணும் இறந்து போனார். முறை அரசனான சித்தப்பாவும் இறந்து போனார். இதனால் இவர் தன் வாழ்க்கையின் பிற்பகுதியில் அரசனாகி தமிழ் பேரசாகிபோனால். இவருக்கு சூரியன் நீசமடைந்து நீசபங்கமாகியது.
நடிகர் அமிதா பச்சனுக்கு சுக்ரன் நீசமாகியும் சினிமாவில் புகழ் அடைந்தார்!
ஸ்ரீ சத்யசாய்பாபா குரு நீசாமாகியும் யோக நிலை பெற்றார்
இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன.

மன்மோகன்சிங் ஜாதகம்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஜாதகம், அப்துல்கலாம் ஜாகதம்,சதானந்த கவுடா ஜாகதம், சதாம்உசேன் ஜாதகம் ,
விஜய் ஜயாதகம், அஜித் ஜாதகம், ஜெய் ஜாதகம், கமலஹாசன் ஜாதகம், சித்தார்த் ஜாதகம், விக்ரம்ஜாதகம், சோதிடம்!  ஜாதகம்,  வாசிம் அகரம் ஜாதகம்